
இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்குமாறு சிங்கப்பூர் மக்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணத்தால், இலங்கை முழுவதும் அரசுக்கு எதிராக ஒரு மாதமாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது அரசு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதில் வன்முறை வெடித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஆளுங்கட்சியினரின் வீடுகளை மக்கள் சூறையாடி வருவதால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
படிக்க | இலங்கையில் நாளை(மே 13) வரை ஊரடங்கு நீட்டிப்பு: இன்று 7 மணிநேரம் தளர்வு
இந்நிலையில், சிங்கப்பூர் மக்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மக்கள் யாரும் மேற்கொள்ள வேண்டாம். இலங்கையில் உள்ள சிங்கப்பூர் மக்கள் யாரும் பொது இடங்களுக்கோ, போராட்டம் நடைபெறும் இடங்களுக்கோ செல்வதை தவிர்க்க வேண்டும்.
செய்திகள் மற்றும் உள்நாட்டு அதிகாரிகளின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும்.
படிக்க | உணவுக்காக பணம் கேட்ட சிறுவனை கொலை செய்த காவலர்! ம.பி.யில் கொடூரம்
சிங்கப்பூரில் உள்ளவர்கள் மற்றும் செல்லும் பயணிகள் அனைவரும் பயணக் காப்பீட்டை உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.