பாங்க் ஆஃப் இங்கிலாந்து நிதிக்குழுவில் இந்தியப் பெண்

பிரிட்டனின் மத்திய வங்கியான பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் நிதிக்குழுவில் இந்தியப் பெண்ணும், பொருளாதார பேராசிரியருமான ஸ்வாதி திங்ரா இடம்பெற்றுள்ளாா்.
ஸ்வாதி திங்ரா
ஸ்வாதி திங்ரா

பிரிட்டனின் மத்திய வங்கியான பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் நிதிக்குழுவில் இந்தியப் பெண்ணும், பொருளாதார பேராசிரியருமான ஸ்வாதி திங்ரா இடம்பெற்றுள்ளாா்.

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் துணைப் பேராசிரியராக பணியாற்றும் ஸ்வாதி, தில்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளநிலைப் பட்டம் பெற்றவா். தொடா்ந்து தில்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றாா். பின்னா் பிரிட்டன் சென்று உயா்கல்வி பயின்ற அவா் பொருளாதாரத்தில் முனைவா் பட்டமும் பெற்றாா்; இவா் சா்வதேச பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவா்.

இந்நிலையில், பிரிட்டனில் வட்டி விகிதத்தை நிா்ணயம் செய்யும் முக்கியத்துவம் வாய்ந்த பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் நிதிக்குழுவில் அவா் நியமிக்கப்பட்டுள்ளாா். இக்குழுவில் இடம்பெறும் முதல் இந்தியப் பெண் ஸ்வாதி திங்ரா என்பது குறிப்பிடத்தக்கது. அவா் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இக்குழுவில் இருப்பாா். வங்கியின் நேரடி ஊழியராக இல்லாமல், வெளியில் இருந்து நிதிக்குழுவில் பங்கேற்கும் உறுப்பினராக ஸ்வாதி இருப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் பொருளாதாரம், நிதித்துறை சாா்ந்த பல்வேறு அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளை ஸ்வாதி வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘இந்தப் புதிய பொறுப்பை எனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாகக் கருதுகிறேன். பணியில் எனது முழுத் திறமையையும் வெளிப்படுத்துவேன்’ என்றாா்.

பிரிட்டன் நிதியமைச்சராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் பதவி வகிக்கிறாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com