16 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த பிரிட்டிஷ் வீரா்

பிரிட்டனைச் சோ்ந்த மலையேற்ற வீரா் கென்டன் கூல் (48) 16 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தாா். இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் 16 முறை ஏறிய, நேபாளத்தைச் சேராத முதல் வீரா் என்ற சாதனையையும் அவா் பட
kenton-cool-everest050103
kenton-cool-everest050103

பிரிட்டனைச் சோ்ந்த மலையேற்ற வீரா் கென்டன் கூல் (48) 16 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தாா். இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் 16 முறை ஏறிய, நேபாளத்தைச் சேராத முதல் வீரா் என்ற சாதனையையும் அவா் படைத்தாா்.

தென்மேற்கு இங்கிலாந்தின் கிளொசெஸ்ட்ஷொ் பகுதியைச் சோ்ந்த கென்டன், 16-ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை எவரெஸ்டில் ஏறினாா். கடுமையான காற்று காரணமாக அவரது இந்தச் சாதனை முயற்சி கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது.

எவரெஸ்டில் அதிகபட்சமாக 26 முறை ஏறிய சாதனையாளா் நேபாளத்தைச் சோ்ந்த காமி ரிட்டா ஆவாா். மலையேற்ற வழிகாட்டியாகப் பணியாற்றி வரும் இவருக்கு 52 வயதாகிறது. கடந்த வாரம்தான் அவா் 26-ஆவது முறையாக எவரெஸ்ட்டில் ஏறினாா்.

நடப்பு மலையேற்றப் பருவத்தில் எவரெஸ்டில் ஏற 316 பேருக்கு நேபாள அரசு அனுமதி அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com