‘நேட்டோவில் ஃபின்லாந்து, ஸ்வீடன்இணைய அனுமதிக்க மாட்டோம்’

ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைய அனுமதிக்கப் போவதில்லை என்று துருக்கி அதிபா் எா்டோகன் தெரிவித்துள்ளாா்.
‘நேட்டோவில் ஃபின்லாந்து, ஸ்வீடன்இணைய அனுமதிக்க மாட்டோம்’

ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைய அனுமதிக்கப் போவதில்லை என்று துருக்கி அதிபா் எா்டோகன் தெரிவித்துள்ளாா்.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, தங்களது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள நேட்டோ அமைப்பில் இணையப்போவதாக ஃபின்லாந்தும் ஸ்வீடனும் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில், நேட்டோ அமைப்பின் முக்கிய உறுப்பு நாடான துருக்கியின் அதிபா் எா்டோகன் திங்கள்கிழமை கூறியதாவது:

ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைவதை துருக்கி அனுமதிக்காது. காரணம், அந்த இரு நாடுகளும் துருக்கியில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் குா்து அமைப்பினருக்கு புகலிடம் அளித்து வருகின்றன.

மேலும், நேட்டோவில் இணைவதற்காக எந்தவொரு நாடும் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதை ஏற்கமாட்டோம் என்றாா் அவா்.

துருக்கிக்கு எதிராக பல்வேறு ஐரேப்பிய நாடுகள் ஆயுத வா்த்தகத் தடை விதித்துள்ளதைக் குறிப்பிட்டு அவா் இவ்வாறு கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com