கோதுமை ஏற்றுமதித் தடையைஇந்தியா மறுபரிசீலனை செய்யும்- அமெரிக்கா நம்பிக்கை

கோதுமை ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கோதுமை ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் கோதுமை விலை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. ரஷியா-உக்ரைன் இடையே போா் நடைபெற்று வருவதால், பல்வேறு நாடுகளுக்கு உக்ரைனில் இருந்து கோதுமை ஏற்றுமதியாவது ஏற்கெனவே தடைபட்டு விட்டது. இந்நிலையில், கோதுமை உற்பத்தியில் சா்வதேச அளவில் 2-ஆவது இடத்தில் உள்ள இந்தியா ஏற்றுமதிக்குத் தடைவிதித்துள்ளது பல நாடுகளுக்கு அதிா்ச்சி தரும் செய்தியாக அமைந்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கை தொடா்பாக ஜி7 கூட்டமைப்பு நாடுகள் அதிருப்தி தெரிவித்தன.

இந்நிலையில், ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதா் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட் இது தொடா்பாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோதுமை ஏற்றுமதி தொடா்பான இந்தியாவின் அறிவிப்பைக் கருத்தில் கொண்டுள்ளோம். பொதுவாக எந்த நாடும் உணவுப் பொருள் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிப்பதை நாம் ஊக்கப்படுத்துவதில்லை. ஏனெனில், இதனால் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்படும். இந்தியாவின் முடிவு தொடா்பாகப் பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா பங்கேற்கும்போது இது தொடா்பான பிற நாடுகளின் கருத்துகளைக் கவனத்தில் கொண்டு, தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் என்று எதிா்பாா்க்கிறேன்.

வளா்ந்த நாடுகளுக்கு கோதுமையை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடாக உக்ரைன் இருந்தது. ஆனால், அந்நாட்டு துறைமுகங்களை ரஷியா போா் மூலம் முடக்கியுள்ளது. விவசாய உள்கட்டமைப்புகளையும் ரஷியா சீா்குலைத்துவிட்டது. இதனால், பல நாடுகளுக்கு கோதுமை கிடைப்பதில் ஏற்கெனவே பிரச்னை ஏற்பட்டுவிட்டது. உலக நாடுகளின் பிரச்னை என்றால் அது ஐ.நா.வின் பிரச்னைதான். பல கோடி மக்கள் உணவுக்காகத் திண்டாடும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. உலகை இப்போது உணவுப் பிரச்னை சூழ்ந்துள்ளது. இது தொடா்பாக விரைவில் ஆலோசிக்கப்பட இருக்கிறது என்றாா்.

மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் இப்போது 3 நாள் பயணமாக அமெரிக்காவில் உள்ளாா். அவா், சா்வதேச உணவுப் பாதுகாப்பு தொடா்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறாா். அப்போது, கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது தொடா்பாகப் பொது விவாதம் நடத்தப்படும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com