உலகளவில் கரோனா பாதிப்பு 52.50 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52.50 கோடியாக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52.50 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறப்புகள் எண்ணிக்கை 62,94,856 ஆகவும், தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 11,424,880,199 ஆக அதிகரித்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிக்கையின் படி,  உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 52,50,80,438 ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 62,94,856 போ் உயிரிழந்துள்ளனர்.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 49,49,20,117 போ் பூரண குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 38 லட்சத்து 65 ஆயிரத்து 465 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 84,692,706-ஆகவும் பலி எண்ணிக்‍கை 1,028,014-ஆகவும்,  குணமடைந்தோர் எண்ணிக்கை 81,438,103-ஆக உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 43,129,563    -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 524,303 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 30,741,811-ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 665,376     பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

1 கோடிக்கும் அதிகமான பாதிப்புகள் உள்ள மற்ற நாடுகள் விவரம்: (29,489,304), ஜெர்மனி (25,890,456), யுகே (24,330,226), ரஷ்யா (18,007,169), தென் கொரியா (17,889,819), இத்தாலி (17,889,819), 77187,57147,57147,5718,840 , ஸ்பெயின் (12,179,234) மற்றும் வியட்நாம் (10,701,796).

உயிரிழப்பில் பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து அதிக உயிரிழப்புகள் உள்ள நாடுகளின் பட்டியலில், ரஷியா (3,70,354), மெக்சிகோ (3,24,617), பெரு (2,13,058), இங்கிலாந்து (1,90,322), இத்தாலி (1,65,16,50), இந்தோனேசியா (16,51,650), 1 லட்சத்துக்கும் அதிகமான இறப்பு எண்ணிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில்,பிரான்ஸ் (1,48,686), ஈரான் (1,41,244), கொலம்பியா (1,39,821), ஜெர்மனி (1,37,888), அர்ஜென்டினா (1,28,776), போலந்து (1,16,230), ஸ்பெயின் (1,05,642) மற்றும் தென் ஆப்பிரிக்கா (1,00,867) பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com