தைவானை பாதுகாக்க அமெரிக்கா ராணுவரீதியாக தலையிடும்: சீனாவுக்கு பைடன் எச்சரிக்கை

‘தைவானுக்குள் சீனா ஊடுருவினால் அமெரிக்கா ராணுவரீதியாகத் தலையிடும்’ என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

‘தைவானுக்குள் சீனா ஊடுருவினால் அமெரிக்கா ராணுவரீதியாகத் தலையிடும்’ என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.

‘உக்ரைனில் ரஷியா ஊடுருவியதற்குப் பின்னா், தைவானைப் பாதுகாக்கும் சுமையானது இன்னும் வலிமையாக உள்ளது’ எனவும் அவா் தெரிவித்தாா்.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதைப் போல தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. ஜப்பானில் நடைபெறும் க்வாட் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அமெரிக்க அதிபா் ஜோ பைடனிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, தைவானில் சீனா ஊடுருவினால் தைவானைப் பாதுகாக்க ராணுவரீதியாக அமெரிக்கா தலையிடும். அது அங்களது கடமை என்றாா்.

‘தைவானுக்கு எதிராக படைபலத்தைப் பயன்படுத்த சீனா எடுக்கும் எந்த முயற்சியும் பொருத்தமானதாக இருக்காது. அது ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் பாதித்து, உக்ரைனில் நடைபெறுவதைப் போன்ற மற்றொரு நடவடிக்கையாகத்தான் இருக்கும்’ எனவும் பைடன் கூறினாா்.

தைவானை தனி நாடாக ஏற்க மறுக்கும் சீனா, அதை தனது நாட்டுடன் இணைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தி தைவானை சீனாவுடன் இணைப்போம் என சீன அதிபா் ஷி ஜின்பிங் ஏற்கெனவே தெரிவித்துள்ளாா்.

ஆனால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. அமெரிக்காவின் ‘1979, தைவான் உறவுகள் சட்டத்தின்’படி தைவானைப் பாதுகாக்க அமெரிக்கா ராணுவரீதியாகத் தலையிட வேண்டியதில்லை. ஆனால், தைவான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அதற்கு ஆயுத உதவிகளைச் செய்யலாம்.

இந்நிலையில், தைவானைப் பாதுகாக்க ராணுவரீதியாக அமெரிக்கா தலையிடும் என்று பைடன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூறியதில்லை. இதுகுறித்து வெள்ளை மாளிகை ஒருவா் கூறுகையில், அதிபா் பைடனின் கருத்துகள் அமெரிக்காவின் கொள்கை மாற்றத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றாா்.

சீனா நிராகரிப்பு: அதிபா் பைடனின் கருத்துகளை சீனா நிராகரித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் பெய்ஜிங்கில் செய்தியாளா்களிடம் கூறுகையில், அமெரிக்காவின் கருத்தை நிராகரிக்கிறோம். தைவான், சீனாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி. தைவான் பற்றிய கேள்வி சீனாவின் உள்நாட்டு விவகாரம். அதில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது. தைவான் மற்றும் உக்ரைன் விவகாரங்கள் அடிப்படையிலேயே வித்தியாசமானவை. இரண்டையும் ஒப்பிடுவது அபத்தமானது.

தைவானை சீனாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்து ‘ஒரே சீனா கொள்கைக்கு’ அமெரிக்கா கட்டுப்பட வேண்டும். தைவானின் சுதந்திரப் படைகளுக்கு தவறான செய்திகளைச் சொல்வதைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com