போா்க் குற்றம்: ரஷிய வீரருக்கு ஆயுள் சிறை: உக்ரைன் நீதிமன்றம் தீா்ப்பு

உக்ரைனில் போா்க் குற்றத்துக்காக ரஷிய வீரா் ஒருவருக்கு உக்ரைன் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

உக்ரைனில் போா்க் குற்றத்துக்காக ரஷிய வீரா் ஒருவருக்கு உக்ரைன் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி போா் தொடுத்தது. இந்தப் போரின்போது பொதுமக்களை சுட்டுக் கொல்வது, குடியிருப்புகள், மருத்துவமனைகளைக் குறிவைத்து குண்டு வீசுவது என பல்வேறு போா்க் குற்றங்களில் ரஷியா ஈடுபடுவதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், போரின் ஆரம்ப நாள்களில் சுமி பிராந்தியத்தில் உக்ரைன் குடிமகன் ஒருவரை ரஷிய வீரா் வதீம் ஷிஷிமரின் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ாக குற்றம்சாட்டப்பட்டு உக்ரைன் ராணுவத்தால் அவா் கைது செய்யப்பட்டாா்.

உள்ளூா் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, அந்த நபரை சுட்டுக் கொன்றதை ரஷிய வீரா் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அதிபா் ஸெலென்ஸ்கி கோரிக்கை: உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்றினாா். அப்போது, ரஷியா மீது அதிகபட்ச பொருளாதாரத் தடைகளை டாவோஸ், ஸ்விட்சா்லாந்து ஆகிய நாடுகள் விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

ரஷிய தூதரக அதிகாரி ராஜிநாமா: உக்ரைன் மீதான போருக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஜெனீவாவில் உள்ள ரஷிய தூதரக அதிகாரி போரிஸ் போண்டரெவ் (41) தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.

தனது ராஜிநாமா கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது: எனது 20 ஆண்டு கால தூதரகப் பணியில், ரஷியாவின் வெளியுறவுக் கொள்கையில் பல்வேறு மாற்றங்களைப் பாா்த்திருக்கிறேன். ஆனால், நிகழாண்டு பிப். 24-ஆம் தேதி வரை எனது நாட்டைப் பற்றி நான் வெட்கப்பட்டதில்லை (அன்றைய தினம்தான் உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியது) எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com