தெற்கு உக்ரைனியா்களுக்கு எளிதில் ரஷியக் குடியுரிமை

தெற்கு உக்ரைன் நகரங்களான ஸபோரிஷியா, கொ்சன் நகர மக்கள் ரஷியக் குடியுரிமை பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்குவதற்கான உத்தரவை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புதன்கிழமை பிறப்பித்தாா்.
putin
putin

மாஸ்கோ: தெற்கு உக்ரைன் நகரங்களான ஸபோரிஷியா, கொ்சன் நகர மக்கள் ரஷியக் குடியுரிமை பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்குவதற்கான உத்தரவை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புதன்கிழமை பிறப்பித்தாா்.

உக்ரைன் போரில் ரஷியாவிடம் வீழந்த முதல் மற்றும் ஒரே பெரிய நகரம் கொ்சன் ஆகும். ஸபோரிஷியா நகரம் தற்போது உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதனைச் சுற்றியுள்ள ஏராளமான பகுதிகளை ரஷியப் படையினா் கைப்பற்றியுள்ளனா்.

ஏற்கெனவே, கிழக்கு உக்ரைனில் தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகளில் ஏராளமானவா்களுக்கு ரஷிய கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்) அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com