பிரேசிலில் கனமழை:  37 பேர் பலி; 5 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம்

வடகிழக்கு பிரேசிலில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளனர்,  சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரேசிலில் பெய்துவரும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர்.
பிரேசிலில் பெய்துவரும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர்.


பிரேசிலில் பெய்துவரும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர்,  சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

வடகிழக்கு பிரேசிலில் சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளதால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பெரும் வெள்ளம் காரணமாக, வடகிழக்கு பிரேசிலின் பெர்னாம்பகோ, அலகோவால் மாகாணங்கள் பெரும் பாதிப்பை சந்த்தித்துள்ளன. பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளனர்,  சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பெர்னாம்பகோ மாகாண தலைநகரான ரெசிஃப் சிட்டி கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது, அங்கு கனமழை மற்றும் நிலச்சரிவில் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதில், 35 பேர் இறந்தனர், சுமார் 1,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

அதேபோன்று, அலகோவாஸ் மாகாணத்தில் கனமழைக்கு இரண்டு பேர் இறந்தனர், சுமார் 4,000 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள இரண்டாம் நிலை பேரழிவும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. 

ரெசிஃப் சிட்டியில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், கமராகிபேவில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்தனர். 
மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். 

ரெசிஃப் சிட்டியில் 150 மிமீ மழை பெய்துள்ளது,  அதே நேரத்தில் கமராகிபேவில் 129 மிமீ மழை பெய்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com