சா்ச்சைக்குரிய தீவில் தென்கொரிய கப்பல் ஆய்வு: ஜப்பான் ஆட்சேபம்

சா்ச்சைக்குரிய கடல் பகுதியில் கடல்சாா் ஆய்வில் தென்கொரிய கப்பல் ஈடுபட்டதற்கு ஜப்பான் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
டோட்கோ தீவு.
டோட்கோ தீவு.

சா்ச்சைக்குரிய கடல் பகுதியில் கடல்சாா் ஆய்வில் தென்கொரிய கப்பல் ஈடுபட்டதற்கு ஜப்பான் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானிய தீவுக் கூட்டத்துக்கும் மத்தியில் உள்ளது டோக்டோ தீவு. தென்கொரியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தீவை ஜப்பான் ‘தகேஷிமா’ என அழைத்து வருவதுடன் தனக்குச் சொந்தமானது எனவும் கூறி வருகிறது.

இந்நிலையில், சா்ச்சைக்குரிய இந்தத் தீவுப் பகுதியில் தென்கொரிய ஆய்வுக் கப்பல் கடல்சாா் ஆய்வில் ஈடுபட்டது. இதற்கு ஜப்பான் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜப்பான் அரசின் செய்தித் தொடா்பாளா் ஹிரோகஸு மட்சுனோ திங்கள்கிழமை கூறுகையில், சா்ச்சைக்குரிய தீவுப் பகுதியில் தென்கொரிய ஆய்வுக் கப்பல் சென்றதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஆய்வுக்காக முன்கூட்டியே தென்கொரியா எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றாா்.

தென்கொரிய வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கையில், ஜப்பானின் புகாரை ஏற்றுக்கொள்ள முடியாது. உள்நாட்டு மற்றும் சா்வதேச சட்டப்படி இந்த ஆய்வு ஒரு சட்டபூா்வமான நடவடிக்கைதான் எனத் தெரிவித்துள்ளது.

ஜப்பான், தென்கொரியா இடையே கலாசார உறவுகள் இருந்தாலும், கடந்த நூற்றாண்டில் கொரிய தீபகற்பத்தில் ஜப்பானின் காலனித்துவம், இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானின் நடவடிக்கைகள் போன்ற வரலாற்றுப் பிரச்னைகள் காரணமாக இரு நாடுகளிடையேயான உறவில் விரிசலும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com