வாட்ஸ்ஆப் குழுவில் எத்தனை பேர் இருக்கலாம்? புதிய அறிவிப்பு வெளியீடு

பிரபல உரையாடல் செயலியான வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. 
வாட்ஸ்ஆப் குழுவில் எத்தனை பேர் இருக்கலாம்? புதிய அறிவிப்பு வெளியீடு

பிரபல உரையாடல் செயலியான வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. 

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ்ஆப் செயலிக்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்ஆப் செயலி அவ்வப்போது புதியபுதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். 

அதன்படி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பயனர்களின் அசெளரிகயங்களைக் கருத்தில்கொண்டு புதிய பல வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. 

Pic Credit: Blog.whatsapp
Pic Credit: Blog.whatsapp

அதன்படி ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவை ஒரு குறிப்பிட்ட பெயரின் கீழ் ஒருங்கிணைத்துக் கொள்ள வசதி ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரே அலுவலகம் அல்லது இதர இடங்களில் செயல்பட்டு வரும் ஒரே நபர்களைக் கொண்ட வெவ்வேறு குழுக்கள் பொதுப் பெயரின் கீழ் இயங்குவதற்கான வசதி உருவாக உள்ளது. 

அதேபோல் உரையாடலில் கருத்துக் கணிப்புகளை நடத்தும் வசதி, விடியோ அழைப்பில் 32 பேர் வரை இணைந்து கொள்வதற்கான வசதி, குழுவில் 1024 பேர் வரை இணைத்துக் கொள்வதற்கான வசதி உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 

Pic Credit: Blog.whatsapp
Pic Credit: Blog.whatsapp

மேலும் பயனர்களின் தனிப்பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com