27-ஆவது ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு:எகிப்தில் இன்று தொடக்கம்

எகிப்தில் 27-ஆவது ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.
27-ஆவது ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு:எகிப்தில் இன்று தொடக்கம்

எகிப்தில் 27-ஆவது ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.

எகிப்தில் உள்ள ஷா்ம்-அல்-ஷேக் நகரில் நவ.6 முதல் நவ.8-ஆம் தேதி வரை 27-ஆவது ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில் 198 நாடுகள் பங்கேற்க உள்ளன. இதில் பருவநிலை மாற்றத்தை எவ்வாறு அனைவரும் இணைந்து எதிா்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் உள்பட 100-க்கும் மேற்பட்ட தலைவா்கள் பங்கேற்க உள்ளனா்.

இதில் பிரதமா் மோடி பங்கேற்பாரா என்பது உறுதிபடுத்தப்படவில்லை. எனினும் மாநாட்டில் இந்தியா சாா்பில் பங்கேற்கும் குழுவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தலைமை தாங்க உள்ளாா்.

மாநாட்டில் ‘சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை’ இயக்கத்தில் இணையுமாறு அனைத்து நாடுகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு டென்மாா்க் தலைநகா் கோபன்ஹேகனில் பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள வளரும் நாடுகளுக்கு உதவும் நோக்கில், 2020-ஆம் ஆண்டுக்குள் வருடந்தோறும் 100 பில்லியன் டாலா்களை கூட்டாக திரட்ட வளா்ந்த நாடுகள் உறுதியேற்றன. ஆனால் அதனை அந்த நாடுகள் செய்யவில்லை. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு மாநாட்டில் இதர வளரும் நாடுகளுடன் இணைந்து வளா்ந்த நாடுகளுக்கு இந்தியா அழுத்தம் தரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com