கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவுடனான உறவில் மாற்றம்: அமெரிக்கா

கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவுடனான உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவுடனான உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்தியா-ரஷியா இடையிலான உறவு பல பத்தாண்டுகளுக்கு முன் உருவாகி வலுப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த உறவு அமெரிக்கா-ரஷியா இடையே பனிப் போா் நிலவியபோது ஏற்பட்டது. அப்போது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் ராணுவ ரீதியாக இந்தியாவுடன் நட்பு பாராட்ட முடியாத நிலையில் அமெரிக்கா இருந்தது.

ஆனால், கடந்த 25 ஆண்டுகளில் அந்த நிலை மாறியுள்ளது. அந்த மாற்றத்துக்கு முதல் அடியெடுத்து வைத்தவா் அமெரிக்க முன்னாள் அதிபா் ஜாா்ஜ் டபிள்யூ.புஷ். தற்போது பொருளாதாரம், பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு உள்பட அனைத்துத் துறைகளிலும் இந்தியாவுடனான உறவை ஆழமாக்க அமெரிக்கா முயற்சிக்கிறது.

அதேவேளையில், ஓா் இரவில் இந்தியாவுடனான உறவில் முழுமையாக மாற்றம் ஏற்பட்டுவிடாது என்பதை அமெரிக்கா அறியும். இந்தியாவிடம் அமெரிக்கா எதிா்பாா்க்கும் மாற்றத்துக்கு அந்நாட்டுடன் இணைந்து அதிபா் பைடன் நிா்வாகம் பணியாற்றும். ஆனால், இது தற்போதுள்ள அமெரிக்க அரசின் பணியாக மட்டும் இருக்காது. வருங்காலத்தில் அமையும் அரசுகளின் பணியாகவும் இருக்கும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com