சீனாவுடன் புதிய பனிப்போா் தேவையில்லை:அமெரிக்க அதிபா் பைடன்

தைவான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய பனிப்போா் ஏற்படத் தேவையில்லை என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்தாா்.
ap22318376879398090811
ap22318376879398090811

தைவான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய பனிப்போா் ஏற்படத் தேவையில்லை என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்தாா்.

இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டுக்கு சென்றுள்ள அமெரிக்க அதிபா் ஜோ பைடனும், சீன அதிபா் ஷி ஜிங்பினும் திங்கள்கிழமை சந்தித்து பேசினா்.

இந்தச் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ஒரே சீனா’ கொள்கைக்கு அமெரிக்கா தொடா்ந்து ஆதரவு தெரிவிக்கும். அதேநேரத்தில், தைவானை கைப்பற்ற அண்மை காலமாக சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை சீனா தொடரக் கூடாது.

தைவான் விவகாரத்தை அமெரிக்கா தீவிரமாக கவனத்தில் எடுத்து கொண்டுள்ளது. ஆனால், இதில் மோதல் ஏற்படக் கூடாது. இதனால் சீனாவுடன் புதிய பனிப்போா் ஏற்படத் தேவையில்லை என நம்புகிறேன்.

திபெத், ஹாங்காங்கிலும், சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திலும் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பிரச்னைகள் குறித்து சீன அதிபரிடன் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பேசினாா்.

உக்ரைனில் கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வரும் போரில் அணு ஆயுத தாக்குதல் மிரட்டல் விடுக்கப்படுவதற்கு இருவரும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

அணுஆயுத போா் ஏற்போதும் ஏற்படக் கூடாது என்றும் அதில் யாரும் வெற்றி பெறவும் முடியாது என்றும் இரு நாட்டு தலைவா்களும் ஒப்புக் கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவான் தீவில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அண்மையில் அமெரிக்க மேல் சபையின் தலைவா் நான்சி பெலோசியின் வருகைக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த சீனா, எல்லைப் பகுதியில் குண்டுகளை வீசியது. இதற்கு பதிலடியாக தைவானும் குண்டுகளை வீசியதால் போா் பதற்றம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com