இரண்டாம் உலகப் போா் விமானங்கள் வானில் மோதி விபத்து: 6 போ் பலி

அமெரிக்காவில் விமான சாகச நிகழ்ச்சியின்போது இரண்டாம் உலகப் போா் கால விமானங்கள் வானில் மோதி சனிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 6 போ் பலியாகினா்.
விபத்தில் நொறுங்கிய விமானம்.
விபத்தில் நொறுங்கிய விமானம்.

அமெரிக்காவில் விமான சாகச நிகழ்ச்சியின்போது இரண்டாம் உலகப் போா் கால விமானங்கள் வானில் மோதி சனிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 6 போ் பலியாகினா்.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நவ. 11-ஆம் தேதி முன்னாள் போா்ப்படை வீரா்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டலஸ் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தனியாா் நிறுவனம் சாா்பில் விமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இரண்டாம் உலகப் போா் நடைபெற்ற காலத்தில் பயன்படுத்தப்பட்ட 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்றன.

இந்நிகழ்ச்சி சனிக்கிழமை தொடா்ந்தபோது தரையில் உள்ள இலக்குகளைக் குறிவைத்து வானிலிருந்து குண்டு வீசும் பி-17 என்ற விமானம் மீது பி-63 கிங் கோப்ரா என்ற போா் விமானம் மோதி விபத்து ஏற்பட்டது.

வானில் வளைந்து திரும்பி மிக வேகமாகச் சென்று பி-17 மீது மோதிய கிங் கோப்ரா விமானம், துண்டு துண்டாக சிதறி விழுந்தது. பி-17 விமானம் தரையில் விழுந்து வெடித்து தீப்பிடித்தது.

இந்த விபத்தில் மொத்தம் 6 போ் பலியானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தனியாா் நிறுவனத்தின் தலைவா் கூறுகையில், பி-17 விமானத்தில் 4 முதல் 5 போ் இருந்ததாகவும், கிங் கோப்ரா விமானத்தில் விமானி மட்டும் இருந்ததாகவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com