ஒருவேளை உணவுக்கு ரூ.1.3 கோடி ரசீது! வரி மட்டும் ரூ.6.5 லட்சம்!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிரபல உணவகத்தில் ஒருவேளை உணவுக்கு வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ.1.3 கோடி ரசீது வழங்கப்பட்டுள்ளது
ஒருவேளை உணவுக்கு ரூ.1.3 கோடி ரசீது! வரி மட்டும் ரூ.6.5 லட்சம்!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிரபல உணவகத்தில் ஒருவேளை அசைவ உணவுக்கு வாடிக்கையாளர் ஒருவர்ரூ.1.3 கோடி செலுத்தியுள்ளார். அதில் அந்த உணவுக்காக மதிப்புக் கூட்டு வரி (வாட்) மட்டும் ரூ.6.5 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் துருக்கியைச் சேர்ந்த நுஸ்ரெட் கோக்சி என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். 

சமையல் கலை வல்லுநரான அவரின் உணவகத்தில், அவர் தயாரிக்கும் உணவுகளுக்கு கூடுதல் விலை கொடுத்து உண்பதற்கு வாடிக்கையாளர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். 

ஒரு நபரின் ஒருவேளை இரவு உணவுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.22,000 கொடுத்து உண்பதற்கு அதிக அளவு வாடிக்கையாளர்கள் உள்ளனர். துபை நாணய மதிப்பில் 1000 திராம்.

2010ஆம் ஆண்டு துருக்கியில் தனது முதல் உணவகத்தை தொடங்கும்போது பொருளாதார ரீதியாக நுஸ்ரெட் மிகவும் பின் தங்கியிருந்தார். . 

ஆனால், தங்கம் இழைத்த அசைவ உணவை அவர் சமைக்கத் தொடங்கியதிலிருந்து அவரின் தொழில் பெருமுதலாளிகளை தன்னுடைய வாடிக்கையாளர்களாக கவர்ந்தது. 

அதன் எதிரொலியாக தற்போது அவரின் சொத்து மதிப்பு மற்ற சமையல் கலைஞர்களைக் காட்டிலும் பலமடங்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் அவர் சமைத்த ஒருவேளை உணவுக்கு வாடிக்கையாளர் ஒருவர் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.3 கோடி பணம் செலுத்தியுள்ளார். துபை நாணய மதிப்பில் 615,065 திராம். 

இந்த உணவுக்கான மதிப்புக் கூட்டுவரி மட்டும் ரூ.6.5 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. உணவுக்கான ரசீதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நுஸ்ரெட் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. 

பணவீக்கம், பொருளாதார நெருக்கடி என பலவற்றில் உலக நாடுகள் சிக்கித் தவிப்பது ஒருபுறம் இருந்தாலும், உணவின்றி தவிக்கும் மக்கள் மற்றொரு புறம் இருக்கிறார்கள் என்றும், ஒருவேளை உணவுக்கு இத்தனை செலவா என பலர் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com