கரோனாவுக்குப் பிறகு குழந்தைகளுக்கு பக்கவாதம் ஏற்படுவது அதிகரிப்பு: ஆய்வு

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு சிறிய ஆய்வின்படி, கரோனா தொற்றுக்குப் பிறகு குழந்தைகளுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
கரோனாவுக்குப் பிறகு குழந்தைகளுக்கு பக்கவாதம் ஏற்படுவது அதிகரிப்பு: ஆய்வு

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு சிறிய ஆய்வின்படி, கரோனா தொற்றுக்குப் பிறகு குழந்தைகளுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

பீடியாட்ரிக் நியூராலஜி இதழில் இந்த வாரம் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கட்டுரையில், மார்ச் 2020 மற்றும் ஜூன் 2021 க்கு இடையில் இஸ்கிமிக் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 16 நோயாளிகளின் மருத்துவ குறியீடுகளை கொண்டு அவர்களை அடையாளம் கண்டு கொண்டனர்.

ஒட்டுமொத்தமாக, குழந்தைகளுக்கு பக்கவாதம் வந்தால் ஒப்பீட்டளவில் குறைந்த ஆபத்து உள்ளது என்ற நிலையில், கோவிட்-19 பிறகு இந்த பாதிப்பு உண்மையாக மாறியுள்ளது என்று உட்டா ஹெல்த் பல்கலைக்கழகத்தில் குழந்தை நரம்பியல் ஆய்வின் முதன்மை ஆசிரியர் தெரிவித்தார். அதே வேளையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், பக்கவாதம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 4 ஆக இருந்தது. 

2021ஆம் ஆண்டு குழந்தைகள் பற்றிய சர்வதேச ஆய்வு முடிவுகளின் படி தொற்று பாதித்த குழந்தைகளுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த கூற்று சர்வதேச ஆய்வின் கண்டுபிடிப்புகளுக்கு முரணாக உள்ளனது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் எடுத்து கொண்ட 16 குழந்தைகளில், பெரும்பாலான குழந்தைகள் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது பக்கவாதத்தால் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில், பக்கவாதத்தின் அறிகுறிகளை முன்கூட்டியே ஆய்வு செய்யம் அவசியத்தை இந்த புதிய ஆய்வு எடுத்துறைத்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com