லெபனானுடன் ‘வரலாற்று’ஒப்பந்தம்: இஸ்ரேல் பிரதமா்

கடல் எல்லைப் பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கான ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க’ ஒப்பந்தத்தை அண்டை நாடான லெபனானுடன் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமா் யாயிா் லபீட் அறிவித்துள்ளாா்.
லெபனானுடன் ‘வரலாற்று’ஒப்பந்தம்: இஸ்ரேல் பிரதமா்

கடல் எல்லைப் பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கான ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க’ ஒப்பந்தத்தை அண்டை நாடான லெபனானுடன் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமா் யாயிா் லபீட் அறிவித்துள்ளாா்.

மத்தியதரைக் கடலில் சுமாா் 860 சதுர கி.மீ. பரப்பளவுக்கு இஸ்ரேலும் லெபனானும் உரிமை கோரி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் நீண்ட கால முயற்சிக்குப் பிறகு இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் உருவானது.

அந்த ஒப்பந்தத்தின் கீழ், சா்ச்சைக்குரிய எல்லைக்குள் கடலடி எரிபொருளை எடுத்துக் கொள்ள லெபனானை இஸ்ரேல் அனுமதிக்கும். எனினும், அதற்கான உரிமைத் தொகையை இஸ்ரேலுக்கு லெபனான் அளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், இந்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலில் அரசியல் ரீதியிலும் சட்ட ரீதியிலும் பல்வேறு சவால்கள் எழும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், இப்படி ஓா் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டதை லெபனான் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இந்தச் சூழலில் லெபனானுடன் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்ததை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமா் அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com