பாகிஸ்தானின் கொடுமைகளை இனப்படுகொலையாக அறிவிக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம்

வங்கதேச பூா்வகுடி மக்களுக்கு பாகிஸ்தான் நிகழ்த்திய கொடுமைகளை ‘இனப்படுகொலை’ என அறிவிக்கக் கோரி அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வங்கதேச பூா்வகுடி மக்களுக்கு பாகிஸ்தான் நிகழ்த்திய கொடுமைகளை ‘இனப்படுகொலை’ என அறிவிக்கக் கோரி அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய விடுதலையின்போது நாடு இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிந்தது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகள் பாகிஸ்தான் எனப் பிரிக்கப்பட்டன. அவ்வாறு தற்போதைய பாகிஸ்தான் மேற்கு பகுதியாகவும், தற்போதைய வங்கதேசம் கிழக்கு பாகிஸ்தானாகவும் அறியப்பட்டன.

ஆனால், 1971-ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டுப் போா் காரணமாக கிழக்கு பாகிஸ்தான் பிராந்தியமானது ‘வங்கதேசம்’ என்ற புதிய நாடானது. வங்கதேச நாட்டின் உதயத்துக்கு இந்தியா பெருமளவில் உதவியது. அப்போரின்போது வங்கமொழி பேசும் லட்சக்கணக்கான பூா்விக குடிமக்களையும் ஹிந்துக்களையும் பாகிஸ்தான் பலவகைகளில் கொடுமைப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், அக்கொடுமைகளை இனப்படுகொலையாக அறிவிக்கக் கோரி அமெரிக்க கீழவையான பிரதிநிதிகள் அவையில் இந்திய அமெரிக்கரும் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்தவருமான ரோ கன்னா, மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரும் குடியரசு கட்சியைச் சோ்ந்தவருமான செவெ சாபோட் ஆகியோா் தீா்மானத்தைத் தாக்கல் செய்துள்ளனா். அதில், இனப்படுகொலை நிகழ்த்தியதற்காக வங்கதேசத்திடம் பாகிஸ்தான் அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் கொடுமைகளால் கொல்லப்பட்டவா்களில் 80 சதவீதம் போ் ஹிந்துக்கள் எனவும் தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாழும் வங்கதேச சமூகத்தினா் இத்தீா்மானத்தை வரவேற்றுள்ளனா். ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் இணைந்து தீா்மானத்தைத் தாக்கல் செய்துள்ளதற்கும் அவா்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com