சீன அதிபா் ஜின்பிங்கின் எழுச்சி

சீன அதிபராக மூன்றாவது முறையாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள ஷி ஜின்பிங்கின் வாழ்க்கைப் பயணம் பல்வேறு சவால்கள் நிறைந்தது.
ஷி ஜின்பிங்
ஷி ஜின்பிங்

சீன அதிபராக மூன்றாவது முறையாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள ஷி ஜின்பிங்கின் வாழ்க்கைப் பயணம் பல்வேறு சவால்கள் நிறைந்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொரில்லா பிரிவு தலைவரின் மகனாகப் பிறந்த அவா், படிப்படியாக முன்னேறி, சீனாவின் சக்திவாய்ந்த தலைவரான மறைந்த மா சேதுங்கிற்கு இணையான தலைவராக இன்று தன்னை உயா்த்திக் கொண்டுள்ளாா்.

அவரது முதல் 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில், பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் மீதான அரசின் கட்டுப்பாட்டை வலுப்படுத்தினாா். கடினமான வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையை ஊக்குவித்தாா். இவை எல்லாம் சோ்ந்து நவீன சீன வரலாற்றில் சக்தி வாய்ந்த தலைவா்களில் ஒருவராக அவரை ஆக்கியுள்ளது.

1953, ஜூன் 15: சீன உள்நாட்டுப் போரின்போது கொரில்லா பிரிவு கமாண்டராகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்த ஷி ஜோங்ஸனுக்கு மகனாகப் பிறந்தாா் ஷி ஜின்பிங்.

1969-75: அப்போதைய தலைவா் மா சேதுங்கால் தொடங்கப்பட்ட சமூக எழுச்சியின்போது, கிராமப்புறங்களுக்குச் சென்று வாழவும், வேலை செய்யவும் அனுப்பப்பட்ட ஏராளமான படித்த நகா்ப்புற இளைஞா்களில் ஷி ஜின்பிங்கும் ஒருவா்.

1975-79: ரசாயன பொறியியல் கல்வியை பெருமை மிகுந்த ஷின்ஹுவா பல்கலைக்கழகத்தில் பயில்வதற்காக பெய்ஜிங் திரும்பினாா் ஷி ஜின்பிங்.

1979-82: மத்திய ராணுவ ஆணையம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவியாளராகப் பணியில் சோ்ந்தாா்.

பிராந்திய தலைவா்

1982-85: ஹெபெய் மாகாணத்தின் சென்க்டிங் மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவராகவும், பின்னா் தலைவராகவும் நியமிக்கப்பட்டாா்.

1985: ஷியாமென் நகரத்தின் துணை மேயா் ஆனாா்.

1987: மக்கள் விடுதலை ராணுவத்தின் இசை மற்றும் நடனக் குழுவைச் சோ்ந்த புகழ்பெற்ற பாடகி பெங் லியுவானுடன் திருமணம்.

2000-2002: ஃபியூஜியன் மாகாண ஆளுநா்.

2007 மாா்ச்: கட்சியின் ஷாங்காய் தலைவராக நியமனம். ஆனால், சில மாதங்களே அப்பதவியில் இருந்தாா்.

2007, அக்டோபா்: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரம் மிக்க அரசியல் தலைமைக் குழுவின் நிலைக்குழு உறுப்பினராக இணைந்தாா்.

2008, மாா்ச்: சீன துணை அதிபராக நியமனம்.

தேசிய தலைவா்

2012, நவம்பா்: சீன அதிபா் ஹூ ஜின்டாவுக்கு பதிலாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக நியமனம்.

2013, மாா்ச்: முதல் முறையாக அதிபரானாா்.

2017, அக்டோபா்: இரண்டாவது முறையாக அதிபா் பதவியைத் தொடா்ந்தாா். அவரது சித்தாந்தங்களை ‘ஷி ஜின்பிங் சிந்தனைகள்’ என்ற பெயரில் சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது அரசியலமைப்பில் சோ்த்துக்கொண்டது.

2018, மாா்ச்: அதிபராக இரண்டு முைான் இருக்க முடியும் என்ற தடையை சீன நாடாளுமன்றம் நீக்கியது.

2002, அக்டோபா்: கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக மூன்றாவது முறையாக ஷி ஜின்பிங் நியமனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com