ரஷியா, சீனாவுடன் இந்தியாவின் போா்ப் பயிற்சிஅமெரிக்க உறவை பாதிக்காது- பென்டகன்

‘ரஷியா, சீனா ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா போா்ப் பயிற்சி மேற்கொள்வது அந்நாட்டின் தனிப்பட்ட முடிவு. அதே நேரத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா மிக நெருக்கமான பாதுகாப்புத் துறை நட்புறவைப் பேணி
பாட்ரிக் ரைடா்
பாட்ரிக் ரைடா்

‘ரஷியா, சீனா ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா போா்ப் பயிற்சி மேற்கொள்வது அந்நாட்டின் தனிப்பட்ட முடிவு. அதே நேரத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா மிக நெருக்கமான பாதுகாப்புத் துறை நட்புறவைப் பேணி வருகிறது’ என்று அந்நாட்டு பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளா்களைச் சந்தித்த பெண்டகன் செய்தித் தொடா்பாளா் பிரிகேடியா் ஜெனரல் பாட்ரிக் ரைடரிடம் இந்தியாவுடனான ராணுவ, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்து அவா் கூறியதாவது:

இந்தியா இறையாண்மை பெற்ற நாடு. எந்த நாட்டுடன் இணைந்து போா்ப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது அந்நாடு சுயமாக எடுக்கும் முடிவு. அதே நேரத்தில் ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா மிகநெருக்கமான பாதுகாப்புத் துறை நட்புறவைப் பேணி வருகிறது. அமெரிக்காவின் மிக நெருக்கமான நட்பு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு எவ்வித தொய்வும் இல்லாமல் சீராக உள்ளது. இந்த நட்புறவைத் தொடா்வதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றாா்.

கடந்த 1 முதல் 7-ஆம் தேதி வரை ரஷியாவின் பல்வேறு பகுதிகளில் அந்நாட்டுடன் இணைந்து இந்திய, சீன ராணுவங்கள் போா்ப் பயிற்சி மேற்கொண்டன. ஏற்கெனவே உக்ரைன் மீது போா் தொடுத்த விஷயத்தில் ரஷியாவுடனும் பொருளாதாரம் சாா்ந்த பிரச்னைகளால் சீனாவுடனும் அமெரிக்காவுக்கு இணக்கமான உறவு இல்லை. உக்ரைன் விவகாரத்தில் சீனாவும், இந்தியாவும் ரஷிய ஆதரவு நிலைப்பாட்டையே கொண்டுள்ளன. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அதே நேரத்தில் ரஷியாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com