யேமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலி: 300 பேர் காயம்!

யேமன் தலைநகர் சனாவில் ஏழை மக்களுக்கு நிதியதவி வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்சி 85 பேர் உயிரிழந்தனர். 
யேமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலி: 300 பேர் காயம்!

யேமன் தலைநகர் சனாவில் ஏழை மக்களுக்கு நிதியதவி வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்சி 85 பேர் உயிரிழந்தனர். 

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு யேமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ள பள்ளி ஒன்றில் அறக்கட்டளை ஒன்று ஏழைகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பலரும் ஒரே இடத்தில் கூடியதால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. 

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 85 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 

அமைச்சகத்துடன் ஒத்துழைக்காமல், உள்ளூர் வணிகர்களால் சீரற்ற முறையில் பண விநியோகம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட நெரிசலில் இந்த பேரழிவு ஏற்பட்டதாகக் குழுவின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

ஒருங்கிணைக்கப்படாத பண விநியோகத்திற்கு காரணமான 2 வணிகர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் காலிக் அல்-அஜ்ரி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com