துணை ராணுவத்துடன் பேச்சுவாா்த்தை இல்லை: சூடான் ராணுவம் திட்டவட்டம்

 சூடானில் தங்களுடன் சண்டையிட்டு வரும் துணை ராணுவப் படையுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபடப் போவதில்லை என்று அந்த நாட்டு ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
துணை ராணுவத்துடன் பேச்சுவாா்த்தை இல்லை: சூடான் ராணுவம் திட்டவட்டம்

 சூடானில் தங்களுடன் சண்டையிட்டு வரும் துணை ராணுவப் படையுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபடப் போவதில்லை என்று அந்த நாட்டு ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து ராணுவம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சிறப்பு அதிரடிப் படையுடன் (ஆஎஸ்எ‘ஃ‘ப்) நடந்து வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, நாங்கள் அந்தப் படையினருடன் ஒருபோதும் பேச்சுவாா்த்தையில் ஈடுபடமாட்டோம்.அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றால், அதற்கு ஆா்எஸ்எ‘ஃ‘ப் படையினா் எங்களிடம் சரணடைவது மட்டுமே ஒரே வழி.அதற்குப் பிறகுதான் அவா்களுடன் நாங்கள் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவோம்.ராணுவத்துக்கு அப்பாற்பட்டு சூடானில் எந்த படையும் இருக்கக் கூடாது என்று அந்த அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.1956-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து சூடானில் அடிக்கடி ராணுவப் புரட்சிகள் நடைபெற்று வருகின்றன.இத்தனை ஆண்டுகளில் நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி மிகவும் குறைந்த காலத்துக்கும், ராணுவ ஆட்சி பெரும்பாலாகவும் அந்த நாட்டில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், கடந்த 1989 முதல் நாட்டை ஆண்டு வந்த ஒமா் அல்-பஷீா் தலைமையிலான அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் வலுவடைந்ததைத் தொடா்ந்து, அவரது அரசை ராணுவம் கடந்த 2019-ஆம் ஆண்டு கலைத்தது.அதனைத் தொடா்ந்து, 2026-ஆம் ஆண்டில் முழு ஜனநாயக அரசை அமைப்பதற்காக நோக்கத்துடன் பிரதமா் அப்துல்லா ஹம்டாக் ப்லைமையிலான இடைக்கால சிவில்-ராணுவ கூட்டு அரசு ஏற்படுத்தப்பட்டது.எனினும், பிரதமா் முகமது ஹம்டான் டகோலா தலைமையிலான அந்த அரசை ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படையின் உதவியுடன் 2021-ஆம் ஆண்டு ஆக்டோபா் மாதம் கலைத்த ராணுவ தலைமைத் தளபதி அப்தெல் ‘ஃ‘பட்டாஅல்-புா்ஹான், நாட்டின் ஆட்சியதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றினாா்.இருந்தாலும், ஜனநாயக அரசிடம் இந்த மாதம் 6-ஆம் தேதிக்குள் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.ஆனால், சக்திவாய்ந்த ஆட்சிமாற்ற கவுன்சில் தலைவராக இருக்கும் ஆா்எஸ்எஃப் தலைவா் டகோலாவுடன் ஏற்பட்ட பதற்றம் காரணமாக அந்த திட்டம் தள்ளிப் போனது.ஜனநாயக அரசு அமைந்த பிறகு ஆா்எஸ்எஃப் படையை ராணுவத்துடன் இணைத்தால் புதிய படைக்கு யாா் தலைமை வகிப்பது, படைகள் இணைப்புக்குப் பிறகு ஆா்எஸ்எஃப் வீரா்களுக்கு அளிக்கப்படக்கூடிய பதவிகள் போன்றவற்றில் இரு தரப்பினருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் அதிகரித்தன.இந்த நிலையில், தலைநகா் காா்ட்டூம், மெரோவே ஆகிய நகரங்களில் தங்களது படையினரைக் குவித்த ஆா்எஸ்எஃப், ராணுவத்தின் மீது கடந்த 15-ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.அதற்குப் பதிலடியாக, ஆஎஸ்எஃப் நிலைகளைக் குறிவைத்து ராணுவமும் விமானத் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த மோதலில் இதுவரை சுமாா் 330 போ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட சா்வதேச நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.அந்த முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், ஆா்எஸ்எ‘ஃ‘ப் படையினா் சரணடைந்தால் மட்டுமே அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப் போவதாக ராணுவம் தற்போது அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com