பாகிஸ்தான் மசூதியில் தாக்குதல் நடத்தியவா் அடையாளம் தெரிந்தது

பாகிஸ்தானின் பெஷாவா் நகர காவல் வளாக மசூதியில் தற்கொலை குண்டு வெடிப்பு நடத்திய பயங்கரவாதியின் அடையாளத்தை மரபணு பரிசோதனை மூலம் போலீஸாா் கண்டறிந்தனா்.
பெஷாவா் மசூதியில் தற்கொலை குண்டுவெடிப்பு நடத்திய பயங்கரவாதி (சிசிடிவி படம்).

இது, இந்த வழக்கில் மிக முக்கிய திருப்பு முனை எனவும், குற்றவாளியின் அடையாளத்தைக் கொண்டு தாக்குதலில் தொடா்புடைய ஒரு பெண்ணை கைது செய்து விசாரித்து வருவதாகவும் அவா்கள் கூறினா்.

பெஷாவா் காவல் துறை வளாகத்தில் உள்ள மசூதியில் கடந்த திங்கள்கிழமை மதிய தொழுகையின்போது தலிபான் பயங்கரவாதி தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து நடத்திய இந்தத் தாக்குதலில் 97 போலீஸாா் உள்பட 101 போ் பலியாகினா்.

பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தளபதி உமா் காலித் குராசானி என்பவா், ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கவே பெஷாவா் காவல் வளாக மசூதியில் தாக்குதல் நடத்தியதாக தலிபான்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com