எகிப்தில் அதிகரிக்கும் பணவீக்கம்: அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்வு!

எகிப்தில் ஜனவரி மாத பணவீக்கம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் எகிப்து மக்கள் கடுமையான விலைவாசி உயர்வை சந்தித்து வருவதாக அந்த நாட்டின் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எகிப்தில் அதிகரிக்கும் பணவீக்கம்: அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்வு!

எகிப்தில் ஜனவரி மாத பணவீக்கம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் எகிப்து மக்கள் கடுமையான விலைவாசி உயர்வை சந்தித்து வருவதாக அந்த நாட்டின் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எகிப்து அரசின் கீழ் இயங்கி வரும் புள்ளியியல் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டில் ஆண்டுக்கான பணவீக்கம் 26.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 21.9 சதவிகிதமாக இருந்த எகிப்தின் பணவீக்கம் இந்த ஆண்டு (2023) ஜனவரியில் 26.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ரஷிய-உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் எகிப்தின் பணவீக்கம் 8 சதவிகிதமாக இருந்தது. 

இருப்பினும், கடந்த மாதம் முதல் எகிப்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. பிரட் மற்றும் சிறு தானியங்களின் விலை 6.6 சதவிகிதத்துக்கு அதிகரித்தது. இறைச்சி மற்றும் அசைவம் சார்ந்த பொருட்களின் விலை 20.6 சதவிகிதமாக அதிகரித்தது. எகிப்தின் பொருளாதாரம் கரோனா மற்றும் ரஷிய-உக்ரைன் போரினால் தொடர்ந்து கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. உலகின் மிகப் பெரிய கோதுமை இறக்குமதி செய்யும் நாடு எகிப்து. எகிப்துக்கான கோதுமை இறக்குமதி கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பெறப்பட்டு வந்தது. விலைவாசி உயர்வினால் குறைந்த அளவிலான ஊதியம் பெறும் நடுத்தர வர்க்க மக்கள் தங்களது அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கே சிரமப்படுகின்றனர். இதனால், அவர்கள் உணவுத் தேவைக்காக அரசியன் மானியத்தை எதிர்பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட 30 சதவிகித எகிப்து மக்கள் ஏழ்மையில் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2022 ஜனவரி முதல் அமெரிக்க டாலருக்கு எகிப்தின் பவுண்ட் மதிப்பு தொடர்ந்து குறைந்து வந்து தற்போது 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக அதன் மதிப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com