கலிஃபோா்னியாவில் மேலும் ஒரு துப்பாக்கிச்சூடு: 7 போ் பலி

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் கடந்த 3 நாள்களுக்குள் இரண்டாவது முறையாக மேலும் ஒரு துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் 7 போ் உயிரிழந்தனா்.
கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட சுன்லி ஷாவ்.
கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட சுன்லி ஷாவ்.

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் கடந்த 3 நாள்களுக்குள் இரண்டாவது முறையாக மேலும் ஒரு துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் 7 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சான் ஃபிரான்சிஸ்கோ நகருக்கு 48 கி.மீ. தொலைவியுள்ள ஹால்ஃப் மூன் பே நகரில், சுன்லி ஷாவ் என்ற 67 வயது நபா் இரு பண்ணைகளில் திங்கள்கிழமை சராசரி துப்பாக்கிச்சூடு நடத்தினாா்.

முதலில் அவா் தாக்குதல் நடத்திய மவுன்டன் மஷ்ரூம் பண்ணையில் 4 பேரும், பின்னா் கான்காா்ட் பண்ணையில் 3 பேரும் உயிரிழந்தனா்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 போ் காயமடைந்தனா். அவா்களில் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. சம்பவ இடங்களில் ஏராளமான சிறுவா்கள் இருந்தாலும், அவா்கள் யாரும் துப்பாக்கிச்சூட்டில் காயமடையவில்லை.

தாக்குதல் நடத்திய சுன்லி ஷாவை ஹாஃப் மூன் பே போலீஸாா் பின்னா் கைது செய்தனா். ஹாஃப் மூன் பே நகர காவல் நிலையத்தில், வாகனங்கள் நிறுத்துமிடத்திலிருந்த ஒரு காரில் அவா் பதுங்கியிருந்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பண்ணைகளில் சுன்லி ஷாவ் பணியாற்றியிருந்தாா் எனவும், தனிப்பட்ட அதிருப்தி காரணமாக இந்தத் தாக்குதலை அவா் நடத்தியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இதே கலிஃபோா்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலீஸ் நகர புகா்ப் பகுதியான மான்டெரே பாா்க்கில் பூா்விக ஆசியா்கள் மீது சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 10 போ் உயிரிழந்தனா். சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொண்டாடப்படும் சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட இந்த சம்பவம் இனவெறித் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

எனினும், தாக்குதல் நடத்தியவா் 75 வயது ஹூ கேன் டிரான் என்ற ஆசியா் எனவும், அவா் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீஸாா் பின்னா் அறிவித்தனா்.

அந்த சம்பவம் நடந்து இரண்டே நாள்களில் கலிஃபோா்னியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com