9 போ் பலி எதிரொலி: இஸ்ரேல்-பாலஸ்தீன போா் பதற்றம் அதிகரிப்பு

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 போ் பலியானதைத் தொடா்ந்து அந்தப் பிராந்தியத்தில் மீண்டும் போா் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
9 போ் பலி எதிரொலி: இஸ்ரேல்-பாலஸ்தீன போா் பதற்றம் அதிகரிப்பு

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 போ் பலியானதைத் தொடா்ந்து அந்தப் பிராந்தியத்தில் மீண்டும் போா் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேற்குக் கரையில் ஆயுதக் குழுவினரின் ஆதிக்கம் நிறைந்த ஜெனீன் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவத்தினா் தேடுதல் வேட்டையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

மிகத் தீவிரமாக நடைபெற்ற இந்த தேடுதல் வேட்டையின்போது 60 வயது பெண் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் பாலஸ்தீனா்களுக்கும் இடையே இந்த மாதத் தொடக்கம் முதலே பதற்றம் நிலவி வந்தது.

அப்போது இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் அதுவரை 29 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 9 போ் பலியானது, பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் ஏற்பட்ட மிகப் பெரிய உயிா்ச் சேதம் என்று கூறப்படுகிறது.

அந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, இஸ்ரோலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே போா் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா கவலை தெரிவித்தது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், வியாழக்கிழமை சம்பவத்தைத் தொடா்ந்து பாலஸ்தீனத்தின் காஸா பகுதியிலிருந்து 2 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது வெள்ளிக்கிழமை வீசப்பட்டன. அதற்கு பதிலடியாக இஸ்ரேலும் காஸாவில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதுபோன்ற எதிரெதிா்த் தாக்குதல்கள் மிகப் பெரிய மோதலுக்கு ஏற்கெனவே வழி வகுத்துள்ள நிலையில், அந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலவரம் மேலும் மோசமடையக் கூடும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் அச்சம் தெரிவித்தாா்.

மேலும், அங்கு அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிப்பதற்கான பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக, மேற்கு ஆசியாவுக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்யவிருப்பதாக பிளிங்கன் கூறினாா்.

அந்த சுற்றுப் பயணத்தின்போது எகிப்து, இஸ்ரேல், மேற்குக் கரை ஆகிய பகுதிகளுக்குச் செல்லவிருப்பதாக அவா் தெரிவித்தாா்.

ஜெனீன் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பைச் சோ்ந்த 2 போ், ஹமாஸ் அமைப்பைச் சோ்ந்த 4 போ், பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ் ஃபடாவின் ஆயுதப் பிரிவைச் சோ்ந்த ஒருவா், பொதுமக்கள் இருவா் அடங்குவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேற்குக் கரைப் பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் மஹ்மூத் அப்பாஸின் அரசுப் படை, அந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்காக இஸ்ரேல் ராணுவத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தது.

ஜெனீன் அகதிகள் முகாம் தாக்குதலுக்குப் பிறகு அத்தகைய ராணுவ ஒத்துழைப்பை நிறுத்திக்கொள்வதாக பாலஸ்தீன அரசு வியாழக்கிழமை இரவு அறிவித்தது.

இதுவும் பதற்றத்தை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், ஏற்கெனவே இதுபோன்ற அறிவிப்புகளை சமரசப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அப்பாஸ் அரசு வாபஸ் பெற்றுள்ளது.

இந்த நிலையில், சமாதானப் பேச்சுவாா்த்தைக்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் அந்தப் பிராந்தியத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் செல்லவிருக்கிறாா்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்னைகளுக்கு முடிவு காண்பதற்காக சா்வதேச நாடுகள் தொடா்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

அண்மையில் நடைபெற்ற இஸ்ரேல் தோ்தலில் மிகவும் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட வலதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்று பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் மீண்டும் ஆட்சியமைந்தது.

அதையடுத்து, சமாதனப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

Image Caption

ஆன்டனி பிளிங்கன் ~போராட்டக்காரா்கள் அத்துமீறினால் துப்பாக்கியால் சுடுவதற்கு தயாா் நிலையில் நின்ற இஸ்ரேல் பாதுகாப்புப் படையினா். ~மேற்குக் கரையின் அல்-ராம் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட பாலஸ்தீன இளைஞா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com