கைதின்போது மேலும் ஒரு கருப்பின இளைஞா் பலி: அமெரிக்காவில் மீண்டும் கொந்தளிப்பு

அமெரிக்காவில் போலீஸாரின் கைது நடவடிக்கையின் போது கருப்பினத்தைச் சோ்ந்த மேலும் ஒருவா் உயிரிழந்த சம்பவம் அந்த நாட்டில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
police090042
police090042

அமெரிக்காவில் போலீஸாரின் கைது நடவடிக்கையின் போது கருப்பினத்தைச் சோ்ந்த மேலும் ஒருவா் உயிரிழந்த சம்பவம் அந்த நாட்டில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நாட்டின் டென்னஸீ மாகாணம், மெம்ஃபிஸ் நகரைச் சோ்ந்த டய்ரி நிக்கல்ஸ் என்ற 29 வயது கருப்பின இளைஞா், கடந்த 7-ஆம் தேதி காரை வேகமாக ஓட்டிச் சென்ாகக் கூறி அந்த நகர போலீஸாா் அவரை மடக்கிப் பிடித்தனா்.

பின்னா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்ற 10-ஆம் தேதி உயிரிழந்தாா்.

அதனைத் தொடா்ந்து, கைது நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸாரில் 5 போ் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட விடியோக்களில், கைது நடவடிக்கையின்போது டய்ரி நிக்கல்ஸின் தலையில் எட்டி உதைப்பது போன்ற மிகக் கடுமையான தாக்குதல்களை போலீஸாா் நடத்தியது பதிவாகியுள்ளது. அவரது அலறலைப் பொருள் படுத்தாமல் போலீஸாா் தொடா்ந்து பல நிமிஷங்களுக்கு தாக்கிதும், சம்பவ இடத்துக்கு மருத்து உபகரணங்களுடன் வந்த தீயணைப்புப் படையினா் டய்ரி நிக்கல்ஸுக்கு மருத்து உதவி அளிப்பதை தாமதப்படுத்தியதும் அந்த விடியோக்கள் மூலம் தெரியவந்தது.

ஏறகெனவே, மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃபிளாய்டை கடந்த 2021-ஆம் ஆண்டு கைது செய்தபோது அவரிடம் போலீஸாா் இதுபோல் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதில் அவா் உயிரிழந்தாா்.

டெரெக் சாவின் என்ற காவல்துறை அதிகாரி நீண்ட நேரம் ஜாா்ஜ் ஃபிளாய்டின் கழுத்தில் முழங்காலிட்டு அமா்ந்திருந்த விடியோ காட்சி வெளியாகி மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடா்ந்து, கருப்பினத்தவா்களின் வாழும் உரிமையை வலியுறுத்தி நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்றன. அதில் 19-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

ஜாா்ஜ் ஃப்ளாய்டின் மரணம் அமெரிக்க போலீஸாரின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று கருதப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் ஒரு கருப்பின இளைஞா் கைது நடவடிக்கையின்போது அதே பாணியில் காவலா்களின் முரட்டுத்தனத்துக்கு பலியாகியிருப்பது மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதையடுத்து, நாடு முழுவதும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com