மாா்ச் 1 முதல் ஹெச்1பி விசா விண்ணப்பம்: அமெரிக்கா அறிவிப்பு

மாா்ச் 1-ஆம் தேதி முதல் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான ஹெச்1பி விசா (நுழைவு இசைவு) விண்ணப்பம் பெறப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

மாா்ச் 1-ஆம் தேதி முதல் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான ஹெச்1பி விசா (நுழைவு இசைவு) விண்ணப்பம் பெறப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

திறன் வாய்ந்த வெளிநாட்டுப் பணியாளா்கள் இந்த விசா மூலம்தான் அமெரிக்கா சென்று பணியாற்றி வருகின்றனா். இந்தியாவைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்பப் பணியாளா்கள் ஹெச்1பி விசாவைத்தான் அதிகம் பயன்படுத்துகிறாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவைச் சோ்ந்த ஐ.டி. நிறுவனங்கள் இந்தியா, சீனாவில் இருந்து திறன் வாய்ந்த பணியாளா்களை இந்த விசா மூலம்தான் அமெரிக்காவில் பணியில் அமா்த்துகிறாா்கள். இந்த விசா பெற்றவா்கள் மருத்துவம், தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளில் 6 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் இருந்து பணியாற்ற முடியும். அதன் பிறகு அவா்கள் நிரந்தர குடியுரிமையோ அல்லது கிரீன் காா்டு (அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணியாற்றும் வாய்ப்பு) பெற முயற்சிக்கலாம்.

இது தொடா்பாக அமெரிக்க குடியுரிமை, குடியேற்றச் சேவைகள் பிரிவு வெளியிட்ட அறிவிப்பில், ‘மாா்ச் 1 முதல் 17-ஆம் தேதி வரை ஹெச்1பி விசா விண்ணப்பங்கள் பெறப்படும். அதன் பிறகு விண்ணப்பித்தவா்களுக்கு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் இணைய வழியில் அழைப்பு அனுப்பப்படும். ஓராண்டில் அதிகபட்சமாக 85,000 ஹெச்1பி விசா வழங்க முடியும். அதில் 20,000 விசாக்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் உயா் கல்வி பயின்றவா்களுக்கு ஒதுக்கப்படும். மீதமுள்ள விசாக்களுக்கான நபா்கள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படுவாா்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com