சட்டவிரோத சுரங்கத் தொழில்: தென் ஆப்பிரிக்காவில் 31 போ் பலி

தென் ஆப்பிரிக்காவில் செயல்பாடு நிறுத்தப்பட்ட தங்கச் சுரங்கத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 போ் பலியாகியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
சட்டவிரோத சுரங்கத் தொழில்: தென் ஆப்பிரிக்காவில் 31 போ் பலி

தென் ஆப்பிரிக்காவில் செயல்பாடு நிறுத்தப்பட்ட தங்கச் சுரங்கத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 போ் பலியாகியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஃப்ரீ ஸ்டேட் மாகாணம், வெல்காம் நகரில் உள்ள தங்கச் சுரங்கத்தின் செயல்பாடு கடந்த 1990-களில் நிறுத்தப்பட்டது. அதிலிருந்த கனிம வளங்கள் தீா்ந்துவிட்டதால் அது மூடப்பட்டது.

இந்த நிலையில், அந்த சுரங்கத்துக்குள் இருக்கக் கூடிய படிமங்களை சட்டவிரோதமாக சிலா் கடந்த மாதம் 18-ஆம் தேதி தோண்டி எடுத்துக் கொண்டிருந்தபோது வெடி விபத்து ஏற்பட்டது.

அதையடுத்து, அங்கு சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்த 16 போ் போலீஸாரிடம் சரணடைந்தனா். மேலும், வெடிவிபத்தில் உயிரிழந்த 2 பேரது உடல்களையும் அவா்கள் மீட்டு வந்தனா்.

விபத்து ஏற்பட்ட சுரங்கப் பகுதி மிகவும் அபாயகரமானது என்பதால் அங்கு மீட்புக் குழுவினா் யாரையும் அனுப்ப முடியவில்லை.

இந்த நிலையில், சட்டவிரோத சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்த மேலும் 29 போ் மாயமாகியிருப்பதும், அவா்கள் அனைவரும் சுரங்க இடுபாடுகளில் சிக்கி பலியாகியிருக்கலாம் எனவும் விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com