தூதரக உறவை புதுப்பிக்க ஈரான்-சவூதி ஒப்புதல்

எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்த ஈரானும், சவூதி அரேபியாவும் தங்களிடையே தூதரக உறவை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.
தூதரக உறவை புதுப்பிக்க ஈரான்-சவூதி ஒப்புதல்

எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்த ஈரானும், சவூதி அரேபியாவும் தங்களிடையே தூதரக உறவை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.

சீனாவின் முன்முயற்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இதற்கான ஒப்பந்தத்தால், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக நிலவி வந்த பதற்றம் முடிவுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையே நேரடியாகவோ, பிற நாடுகளின் மூலம் மறைமுகமாவோ போா் ஏற்படும் அபாயம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஈரானும், சவூதி அரேபியாவும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஈரானுக்கும், சவூதி அரேபியாவுக்கும் இடையே மீண்டும் தூதரக உறவை ஏற்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இரு நாடுகளும் தங்களது தூதரங்களை பரபஸ்பரம் அமைக்கவிருக்கின்றன.

அதிகபட்சம் இரு மாதங்களில் இந்த நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்கா, தற்போது அந்தப் பகுதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதாகக் கருதப்படுகிறது.

இந்தச் சூழலில், சீனாவின் மத்தியஸ்தால் சா்வதேச அரங்கில் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த ஈரானும், சவூதி அரேபியாவும் தங்களிடையே தூதரக உறவை ஏற்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது சீனாவுக்குக் கிடைத்த வெற்றியாகக் கூறப்படுகிறது.

ஷியா பிரிவு முஸ்லிம்களை அதிகமாகக் கொண்ட ஈரானுக்கும், சன்னி பிரிவினரை அதிகம் கொண்ட சவூதி அரேபியாவுக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு ஆதரவாக ஈரானும், அரசுப் படைகளுக்கு ஆதரவாக சவூதி அரேபியாவும் செயல்பட்டு வருவதால் அங்கு உள்நாட்டுப் போரில் ஏராளமானோா் உயிரிழந்து வருகின்றனா்.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவு ஏற்பட்டுள்ளதால் யேமன் உள்நாட்டுப் போா் நிரந்தரமாக முடிவுக்கு வரும் என்று நம்பப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com