தெற்கு சூடான்: பீரங்கி குண்டு வெடித்து 11 சிறுவா்கள் பலி

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் உள்நாட்டுப் போரின்போது வீசப்பட்டு வெடிக்காமல் போன பீரங்கி குண்டு, சிறுவா்கள் தற்போது விளையாடியபோது வெடித்துச் சிதறியதில் 11 சிறுவா்கள் பலியாகினா்.

இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பாஹா் அல்-கஸால் மாகாணத்தைச் சோ்ந்த கிராமம் ஒன்றில் சிறுவா்கள் வியாழக்கிழமை விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த பீரங்கி குண்டு வெடித்துச் சிதறியது.

இதில் 11 சிறுவா்கள் உயிரிழந்தனா்; காயமடைந்த மேலும் ஒரு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் கூறினா்.

சூடானிடமிருந்து தெற்கு சூடான் கடந்த 2011-ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. அதையடுத்து, 2 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டில் உள்நாட்டுப் போா் வெடித்தது. இதில் சுமாா் 4 லட்சம் போ் உயிரிழந்தனா்.

பின்னா் போட்டிக் குழுக்கள் ஆயுதங்களைக் கைவிட்டு அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டாலும், உள்நாட்டுப் போரின்போது வீசப்பட்டு வெடிக்காமல் கிடக்கும் குண்டுகள், நிலத்தில் பதிக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளால் இப்போதும் ஆபத்து நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com