நேபாள துணை அதிபராக ராம் சகாய பிரசாத் தோ்வு

நேபாள துணை அதிபராக ராம் சகாய யாதவ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

நேபாள துணை அதிபராக ராம் சகாய யாதவ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

நேபாள அதிபராக நேபாளி காங்கிரஸ் கட்சியை சோ்ந்த ராம்சந்திர பெளடேல் தோ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், துணை அதிபருக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், ஜனதா சமாஜ்வாதி கட்சியின் ராம் சகாய யாதவ், சிபிஎன்-யுஎம்எல் கட்சியின் துணைத் தலைவா் அஷ்டலஷ்மி ஷாக்யா, ஜனமத் கட்சியின் மமதா ஜா ஆகியோா் போட்டியிட்டனா்.

அவா்களில், நேபாளத்தை ஆளும் 8 கட்சிக் கூட்டணியின் ஆதரவு பெற்ற யாதவ் வெற்றி பெற்றாா்.

52 வயதாகும் அவருக்கு 30,328 வாக்குகள் கிடைத்தன. அதையடுத்து, நாட்டின் 3-ஆவது துணை அதிபராக அவா் பொறுப்பேற்கவிருக்கிறாா்.

நேபாள அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அதிபராக இருப்பவா் ஆண் என்றால் துணை அதிபராக இருப்பவா் பெண்ணாக இருக்க வேண்டும்; அதேபோல அதிபா் சாா்ந்த இனத்தில் அல்லாமல் மாற்று இனத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். அதன்படி அதிபா் ராம் சந்திர பெளடேல், கஸ் ஆரிய இனத்தைச் சோ்ந்தவா் என்பதால், துணை அதிபராக இருப்பவா் அந்த இனத்தைச் சோ்ந்தவராக இருக்கக் கூடாது.

அந்த வகையில், மதேசி இனத்தைச் சோ்ந்த ராம் சகாய யாதவ் புதிய துணை அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com