ரூ.9 லட்சம் : ஏஐ விளம்பர மாடலின் மாத வருவாய் இவ்வளவா?

ஸ்பெயினின் முதல் ஏஐ விளம்பர மாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்பெயினின் முதல் ஏஐ மாடல் (படம்: instagram/fit_aitana)
ஸ்பெயினின் முதல் ஏஐ மாடல் (படம்: instagram/fit_aitana)

விளம்பரங்களில் நடிக்கும் மாடல் நடிகர்களை நாம் அறிவோம். அவர்களின் வருவாய் என்பது அவர்களின் புகழுக்கேற்பவும் மக்களிடையே உள்ள செல்வாக்குக்கு ஏற்பவும் மாறுபடும். உண்மையான மாடல்களை பணியமர்த்திக் கொள்வது அதிக செலவை ஏற்படுத்துவதாகக் கருதிய ஸ்பெயின் நிறுவனம் ஏஐ மாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது.

ஸ்பெயினின் முதல் செயற்கை நுண்ணறிவு மாடல், சமீபத்தில் உலகளவில் வைரலாகி வருகிறது. இந்தப் பெண்ணுக்கு  இதனை உருவாக்கிய க்ளூலெஸ் நிறுவனம் வைத்திருக்கும் பெயர் ஐடானா.

க்ளூலெஸ் நிறுவனத்தின் வடிவமைப்பாளர் ரூபன் குருஸ்,   “எங்கள் நிறுவனத்திற்கு நிறைய வாடிக்கையாளர்கள் இல்லை. பல ப்ரோஜெக்ட்கள் எங்கள் கையில் இருந்து சென்றுவிட்டன. ஏன் என யோசித்தபோது காரணம் வடிவமைப்பு சார்ந்த விஷயத்தில் இல்லை, மாடல்கள் மற்றும் ஊடக பிரபலங்கள்தான் எனக் கண்டறிந்தோம். எங்களுக்கான மாடலை நாங்களே உருவாக்கத் திட்டமிட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மாடல்களுக்கான சம்பளம் என்பது மிக அதிகமாக இருப்பதும் மற்றொரு காரணம் என்கிறார்கள்.

மாதத்திற்கு ஐடானாவின் வருவாய் 3000 யூரோவாக உள்ளது. இது 10,000 யூரோ (இந்தியு மதிப்பில் 9 லட்சம்) வரை செல்லும் என்கிறார்கள்.

இவர்கள் உருவாக்கிய ஐடானா செய்யறிவு மாடலுக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்று உண்டு. அதனை 1.4 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். வழக்கமான மாடல்கள் என்னவெல்லாம் செய்வார்களோ எங்கெல்லாம் போவார்களோ அங்கெல்லாம் இந்த மாடலும் செல்வது போல புகைப்படங்கள் பதிவிடப்படுகின்றன.

ஹாலிவுட் நடிகர்களிடமிருந்து கூட குறுஞ்செய்தியாக மாடலுக்கு நட்பழைப்புகள் வருகின்றன எனச் சொல்கிறார்கள், வடிவமைப்பாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com