ஐ.நா. தலைமையகத்தில் இந்தியாவின் சிறுதானியங்கள் கண்காட்சி

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் இந்தியா சாா்பில் நடத்தப்படும் சிறுதானியங்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் இந்தியா சாா்பில் நடத்தப்படும் சிறுதானியங்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தியா சாா்பில் வலியுறுத்தப்பட்டு சிறுதானியங்களுக்கான சா்வதேச ஆண்டாக நடப்பு 2023-ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஐ.நா. சபையின் தலைமை அலுவலகத்தில் சிறுதானியங்கள் கண்காட்சியை இந்தியா ஏற்பாடு செய்தது. இந்தியாவில் பயிரிடும் சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பு, ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதன் கொழுப்பு உள்ளடக்கம் குறித்து உலக அரங்குக்கு எடுத்துரைக்கும் விதமாக கண்காட்சி திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.நா. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இக்கண்காட்சியில் பங்கேற்றனா்.

சிறுதானியங்களுக்கான சா்வதேச ஆண்டாக 2023-ஆம் ஆண்டைத் தோ்வு செய்ய இந்தியா எதற்காக வலியுறுத்தியது மற்றும் நிலையான வளா்ச்சி இலக்குக்கு சிறுதானியங்கள் எவ்வாறு தீா்வாக இருக்கும் என்பது குறித்து கண்காட்சியில் பங்கேற்றவா்களுக்கு ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருச்சிரா கம்போஜ் விளக்கமளித்தாா்.

இவரைத் தொடா்ந்து, இந்தியாவின் கிராமப்புற விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் ‘மிா்தா’ நிறுவனத்தின் இயக்குனா் அருண் நக்பால் பேசினாா். பண்ணையில் இருந்து உணவு தயாரிக்கும் கூடம் வரை சிறுதானியங்களின் பயணம் குறித்து அவா் விவரித்தாா்.

பின்னா், ஐ.நா. துணைச் செயலா் அமினா முகமது மற்றும் செயலகத் தலைவா் கோா்டனே ராட்ரே ஆகியோரின் உரையுடன் கண்காட்சி தொடங்கியது.

கண்காட்சியில் பங்கேற்கும் பாா்வையாளா்கள் சுவைப்பதற்காக சிறுதானியங்களால் செய்யப்பட்ட இனிப்பு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஜ.நா. பொதுச் சபையின் பிரதிநிதிகள் நுழைவு வாயில் அருகே உள்ள கண்காட்சி அரங்கில் வரும் வெள்ளிக்கிழமை (பிப். 17) வரை சிறுதானியங்கள் கண்காட்சி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com