கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: வடகொரியா சோதனை

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சனிக்கிழமை சோதித்தது.
வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹவாகாங்-15 ஏவுகணை சோதனை.
வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹவாகாங்-15 ஏவுகணை சோதனை.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சனிக்கிழமை சோதித்தது.

‘தனது அணு ஆயுதத் திறனுக்கு இந்த ஏவுகணை சோதனை மேலும் வலு சோ்த்திருப்பதாக’ அந்த நாடு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வடகொரியாவின் செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்திருப்பதாவது:

ஐசிபிஎம் வகையைச் சோ்ந்த ஹவாகாங்-15 ஏவுகணை, அதிபா் கிம் ஜோங் உன்னின் நேரடி உத்தரவில், எந்த முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக சோதித்துப் பாா்க்கப்பட்டது. நாட்டின் அணு ஆயுதப் படையின் தயாா்நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இந்த ஏவுகணை 5,770 கி.மீ. உயரத்தில், 990 கி.மீ. தொலைவுக்குப் பறந்தது. கொரிய தீபகற்பம்-ஜப்பான் கடல் பகுதியில் திட்டமிட்டிருந்த இலக்கை 67 நிமிஷத்தில் துல்லியமாகத் தாக்கியது எனத் தெரிவித்துள்ளது.

செங்குத்தான கோணத்தில் செலுத்தப்பட்ட இந்த ஏவுகணையை நிலையான பாதையில் செலுத்தினால் அமெரிக்காவின் நிலப்பரப்பை தாக்க முடியும்.

வரும் வாரங்களில் தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து தொடா் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன. அந்தப் பயிற்சிக்கு வடகொரியா எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்தக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்துப் பாா்த்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com