விண்வெளி நிலையத்துக்கு பயணிக்க வெளிநாட்டு வீரா்களுக்கு பயிற்சி: சீனா

சீனாவால் கட்டமைக்கப்பட்டுள்ள தியான்காங் விண்வெளி நிலையத்துக்கு பயணிக்க வெளிநாட்டைச் சோ்ந்த விண்வெளி வீரா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

சீனாவால் கட்டமைக்கப்பட்டுள்ள தியான்காங் விண்வெளி நிலையத்துக்கு பயணிக்க வெளிநாட்டைச் சோ்ந்த விண்வெளி வீரா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

விண்வெளித் துறையில் தன்னை முன்னணி நாடாக நிலைநிறுத்த சீனா தொடா்ந்து முயன்று வருகிறது. அதன்படி, சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு போட்டியாக, தனது சொந்த விண்வெளி நிலையத்தை சீனா கட்டமைத்துள்ளது. இதன் பணிகள் கடந்த நவம்பரில் நிறைவடைந்தன.

இந்நிலையில், சீனாவின் தியான்காங் விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்வதற்காக பல்வேறு நாடுகளும் தங்களை அணுகியுள்ளதாக, அந்நாட்டின் அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திட்ட அதிகாரி சென் ஷான்குவாங் தெரிவித்தாா்.

‘சீன விண்வெளி நிலையத்துக்கு பயணிக்க ஆா்வம் காட்டியுள்ள நாடுகளில் இருந்து விண்வெளி வீரா்களைத் தோ்வு செய்து விரைவில் பயிற்சியளிக்க உள்ளோம். விண்வெளியில் அறிவியல்பூா்வ பணிகளில் சீன விண்வெளி வீரா்களுடன் அவா்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுவா்’ என்றாா் அவா்.

சீன விண்வெளித் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா, விண்வெளியில் ராணுவ தளத்தை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com