நேபாளத்தில் பயன்பாட்டுக்கு வராத சீனா கட்டிய பொக்காரா விமான நிலையம்

நேபாளத்தின் பொக்காரா பகுதியில் சீனா கட்டிக் கொடுத்த பொக்காரா சர்வதேச விமான நிலையம் இன்னமும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
கோப்புப் படம்
கோப்புப் படம்

காத்மாண்டு: நேபாளத்தின் பொக்காரா பகுதியில் சீனா கட்டிக் கொடுத்த பொக்காரா சர்வதேச விமான நிலையம் இன்னமும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

இதுவரை இந்த விமான நிலையத்துக்கு எந்தவிதமான சர்வதேச விமானமும் வந்து தரையிறங்கவில்லை என்று அன்னப்பூர்ணா எக்ஸ்பிரஸ் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், பொக்காரா சர்வதேச விமான நிலையம் குறித்து சீனா, இந்தியா மற்றும் இதர நாடுகளுடன் பேசி வருவதாகவும், சர்வதேச விமானங்களை இங்கு தரையிறக்கி மற்றும் புறப்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். சர்வதேச விமானங்கள் வந்து போகாமல், இந்த விமான நிலையத்தை நடத்துவதற்கு போதுமான நிதி கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விமான நிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றால், நாள் ஒன்றுக்கு குறைந்தது 100 உள்ளூர் விமானங்களையும், வாரந்தோறும் குறைந்தது 50 சர்வதேச விமானங்களையும் கையாள வேண்டும் என்று நேபாள விமானப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com