பாரிஸ் மாநாட்டில் உடனடி போர் நிறுத்தம் குறித்து பேச வேண்டும்: அம்னெஷ்டி!

அம்னெஷ்டி இண்டர்நேஷனல் அமைப்பு போர் நிறுத்தம் குறித்து பேச அனைத்து நாடுகளையும் வலியுறுத்தியுள்ளது.
உணவுக்காக அலைமோதும் காஸா மக்கள்
உணவுக்காக அலைமோதும் காஸா மக்கள்

அரசு சார்பற்ற மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்ன்நேஷனல், பாரிஸில் இன்று (நவ.9) நடைபெறும் கூட்டத்திற்குச் செல்லும் தலைவர்கள் உடனடி போர் நிறுத்தம் குறித்து பேச வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் சர்வதேச மனிதத்துவ மாநாட்டை ஒருங்கிணைக்கிறார். இந்த மாநாட்டில் காஸாவில் நடந்து வரும் மனிதத்துவ நெருக்கடிகள் குறித்தும் வாழ்வாதார உதவிகள் கிடைக்க செய்வது குறித்தும் பேசவுள்ளனர்.

அயர்லாந்து, லக்ஸம்பெர்க், கிரீஸ் பிரதமர்கள், மற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

“காஸாவில் இருபது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு இடையே சிக்கியுள்ளனர். இதற்கு முன்பு இது போல இல்லாத அளவுக்கு இந்தத் தாக்குதலில் பலி எண்ணிக்கையும் மனித பேரழிவும் நடந்து வருகிறது. சர்வதேச மனிதத்துவ கருத்தரங்கை ஒருங்கிணைப்பதை நாங்கள் வரவேற்கிறோம். உடனடி போர் நிறுத்தத்திற்கு அனைத்து நாடுகளின் தரப்பிலும் குரல் கொடுக்க வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார் அம்னெஸ்டியின் பொது செயலர் அக்னேஸ்.

பாலஸ்தீன பிரதமர் மற்றும் எகிப்து அமைச்சரவை தூதுக்குழு இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளார்கள். இஸ்ரேல் இதில் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com