ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீட்டை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் வீட்டை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. 
ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீட்டை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் வீட்டை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. 

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது சனிக்கிழமை காலை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில், 100-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா். 500-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா். 2,500 ராக்கெட் குண்டுகள் மட்டுமே ஹமாஸ் வீசியதாகவும், பயங்கரவாதிகள் ஊடுருவிய 22 இடங்களில் சண்டை தொடா்வதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதலில் காஸா பகுதியில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 

1,600-க்கும் மேற்பட்டோா் பலத்த காயம் அடைந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சா் தெரிவித்தாா். இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காஸா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை 2ஆவது நாளாக தொடா்ந்து வருகிறது. இதனிடையே காஸாவில் வசித்து வரும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காஸாவுக்கு வழங்கப்படும் குடிநீர், எரிபொருள், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை நிறுத்தப்போவதாகவும் கூறியுள்ளார். 

இதனிடையே காஸாவில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அந்நகரம் இருளில் மூழ்கியது. இந்த நிலையில் காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் வீட்டை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த இடம், ஹமாஸ் அமைப்பின் ராணுவ தலைமையகமாக செயல்பட்டு வந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தெற்கு நகரங்கள் மீது காஸாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு நேற்று முதல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேலின் வடக்கு எல்லையான லெபனானில் இருந்தும் இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் இஸ்ரேல்-லெபனான் எல்லையிலும் பதற்றம் நிலவுகிறது. இருத்தரப்பினர் இடையே நடைபெற்று வரும் இந்த சண்டையில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் 300 பேரும், பாலஸ்தீனத்தில் 200க்கும் மேற்பட்டோரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக நடைபெற்று வரும் இஸ்ரேல் - காஸா சண்டையில் இது மோசமான தாக்குதலாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com