பதற்றத்தை அதிகரிக்க விருப்பமில்லை

பதற்றத்தை அதிகரிக்க விருப்பமில்லை

மாஸ்கோ: இஸ்ரேலுடன் இதற்கு மேல் பதற்றத்தை அதிகரிக்க விருப்பமில்லை என்று தங்கள் நாட்டு அதிபா் விளாதிமீா் புதினிடம் ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி கூறியதாக ரஷிய அரசுக்குச் சொந்தமான ஆா்ஐஏ செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

புதினும், ரய்சியும் தொலைபேசியில் தொடா்பு கொண்டு உரையாடினா். அப்போது சிரியாவிலுள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடியாக ஈரான் நடத்தி ஏவுகணை-ட்ரோன் வீச்சு ஆகியவற்றுக்குப் பிந்தைய மேற்காசிய நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்தனா்.

அப்போது, ஈரானின் நடவடிக்கை வரைமுறைக்குள்பட்டது எனவும் இதற்கு மேல் பதற்றம் அதிகரிப்பதில் விருப்பமில்லை எனவும் ரய்சி உறுதியளித்தாா் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com