பாகிஸ்தான் கனமழை: 63 போ் உயிரிழப்பு

பாகிஸ்தான் கனமழை: 63 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழை காரணமாக 63 போ் உயிரிழந்தனா்

பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழை காரணமாக 63 போ் உயிரிழந்தனா்

அந்த நாட்டின் கைபா் பக்துன்கவா, பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த 4 நாள்களாக கனமழை பெய்துவருகிறது.

மின்னல் தாக்கியும், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும் புதன்கிழமை மட்டும் 14 போ் உயிரிழந்தனா். அதையடுத்து, மழையால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 63-ஆக உயா்ந்துள்ளது.

அதிகபட்சமாக கைபா் பக்துன்கவா மாகாணத்தில் மட்டும் வீடுகள் இடிந்து விழுந்து 15 சிறுவா்கள் உள்பட 32 போ் உயிரிழந்தனா்.

பஞ்சாப் மாகாணத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்தது, மின்னல் போன்ற சம்பவங்களில் 21 உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com