இறந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்
இறந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

பிரேசிலில் பெண் ஒருவர், தனது 68 வயதான உறவினரை வங்கிக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வந்து, அவரது பெயரில் கடன்பெற முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர் சக்கர நாற்காலியில் வரும்போதே தலை தொங்கியிருந்தபடியால், காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.

இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரியோ டி ஜெனிரியோ வங்கி ஊழியர்கள், அவசர உதவி சேவை மையத்தைத் தொடர்ந்து கொண்டு உதவிக்கு அழைத்தனர். அப்போது, கடன் பெற சக்கர நாற்காலியில் அழைத்து வந்த நபர் கையெழுத்துப் போடும்போது மரணமடைந்தது போல வங்கி ஊழியர்கள் கருதினர். ஆனால், அவசர உதவி ஊழியர்கள் வந்து பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார்அளித்தனர்.

உடனடியாக காவல்துறையினர் விரைந்து வந்து அப்பெண்ணைக் கைது செய்தனர். இறந்தவரின் பெயரில் கடன்பெற்று மோசடியில்ஈடுபட முயன்றதாக அப்பெண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com