துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே(இடது)
துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே(இடது)படம் | ஏபி

காஸாவின் தென் பகுதியிலுள்ள நகரான ராஃபா மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியதில் 6 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

எகிப்து நாட்டின் எல்லையையொட்டியுள்ள ராஃபா நகரில், போரால் பாதிக்கப்பட்ட காஸாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்து அடைக்கலம் புகுந்து வசிக்கின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட சா்வதேச நாடுகளின் எதிா்ப்பையும் மீறி, போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் பொதுமக்களின் கடைசி புகலிடமாகத் திகழும் ராஃபா நகரிலும் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதல்களை தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை பின்னேரத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. ராஃபாவின் புறநகர்ப் பகுதியில் தெல் சுல்தான் பகுதியில் குடியிருப்புக் கட்டடத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டன. இடம் பெயர்ந்தவர்கள் இருந்த குடியிருப்பின் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த கொடூர தக்குதல்களில் 6 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, ஹமாஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஹனியே தலைமையிலான முக்கிய தலைவர்கள் அடங்கிய குழு, துருக்கி அதிபர் எர்டோகனை இன்று(ஏப். 20) நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது.

அப்போது காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படுத்த துருக்கி நடவடடிக்கை எடுக்கும் என எர்டோகன் தெரிவித்துள்ளார். மேலும், பாலஸ்தீனர்கள் இந்த சண்டையில் ஒற்றுமையாக செயல்பட கேட்டுக்கொண்டார். இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடி அளிக்கவும், வெற்றி பெறவும் ஒற்றுமையாக இருந்தால் சாத்தியமென அவர் தெரிவித்துள்ளார். காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருவது தடைபடாமல் தொடருமெனவும் துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com