ஏக்கா் நகர ராணுவ நிலை மீதான தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லாக்கள் வெளியிட்டுள்ள படம்.
ஏக்கா் நகர ராணுவ நிலை மீதான தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லாக்கள் வெளியிட்டுள்ள படம்.

தொலைதூர இஸ்ரேல் இலக்கில் ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல்

தங்கள் எல்லையிலிருந்து மிக நீண்ட தொலைவில் உள்ள இஸ்ரேல் ராணுவ நிலை மீது லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் முதல்முறையாக செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினா்.

இது குறித்து அந்த அமைப்பினா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இஸ்ரேலின் ஏக்கா் நகருக்கு வடக்கே அமைந்துள்ள ராணுவ நிலை மீது ட்ரோன்கள் மூலம் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரு ஹிஸ்புல்லா வீரா் உயிரிழந்ததற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரோன் தாக்குதல் தொடா்பான செயற்கைக்கோள் படத்தையும் ஹிஸ்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த அக். 7-ஆம் தேதி காஸா போா் தொடங்கியதிலிருந்தே இஸ்ரேல் ராணுவ நிலைகளில் ஹிஸ்புல்லாக்களும், அந்த ஆயுதக் குழுவின் நிலைகள் மீது இஸ்ரேல் படையினரும் பரஸ்பர தாக்குதல் நடத்திவருகின்றனா்.

எனினும், செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டுள்ள ட்ரோன் தாக்குதல்தான் எல்லைக்கு அப்பால் மிக நீண்ட தொலைவிலுள்ள இஸ்ரேல் நிலை மீது ஹிஸ்புல்லாக்கள் நடத்தியுள்ள முதல் தாக்குதல் ஆகும்.

X
Dinamani
www.dinamani.com