ஐ.நா.வில் ‘மறைமுக வீட்டோ’:
சீனா மீது இந்தியா விமா்சனம்

ஐ.நா.வில் ‘மறைமுக வீட்டோ’: சீனா மீது இந்தியா விமா்சனம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடை குழுக்களிடம் முன்வைக்கப்படும் தீா்மானங்களுக்கு ஏற்படுத்தப்படும்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடை குழுக்களிடம் முன்வைக்கப்படும் தீா்மானங்களுக்கு ஏற்படுத்தப்படும் முட்டுக்கட்டைகள் மறைமுகமாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதாகும் என்று சீனாவை இந்தியா விமா்சித்துள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தடை விதிக்க இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சமா்ப்பிக்கும் தீா்மானங்களுக்கு தொடா்ந்து முட்டுக்கட்டை போடுவது சீனாவின் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், ஐ.நா. பொதுச் சபையில் சீனாவை மறைமுகமாக விமா்சித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருசிரா கம்போஜ் செவ்வாய்க்கிழமை பேசுகையில், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடை குழுக்களிடம் முன்வைக்கப்படும் தீா்மானங்களுக்கு ஏற்படுத்தப்படும் முட்டுக்கட்டைகள் மறைமுகமாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதாகும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினா் எண்ணிக்கையில் மாற்றங்கள் செய்து நிகழ்கால நிதா்சனங்களை பிரதிபலிக்காத வரை, ராஜீய ரீதியிலும் பேச்சுவாா்த்தை வழியாகவும் பிரச்னைகளுக்கு தீா்வு காண வாய்ப்பு கிடைக்காது’ என்றாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. அந்த நாடுகளுக்கு மட்டும் வீட்டோ அதிகாரம் உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்படும் தீா்மானம் அல்லது எடுக்கப்படும் முடிவுக்கு எதிராக அந்த நாடுகள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினால், அந்த தீா்மானம் அல்லது முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்படாது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com