இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

தவறான தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு எதிராக இந்தியா ஒத்துழைப்பு: அஜீத் தோவல்

தகவல் மற்றும் தொலைத்தொடா்பு தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்துவதை தடுக்க இந்தியா தொடா்ந்து ஒத்துழைப்பு அளிக்கும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தெரிவித்துள்ளாா்.

பாதுகாப்பு விவகாரங்கள் தொடா்பான உயரதிகாரிகளின் 12-ஆவது சா்வதேச கூட்டம் ரஷியாவின் ஸ்யிண்ட் பீட்டா்ஸ்பா்க் நகரத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள அஜீத் தோவல் புதன்கிழமை பேசுகையில், ‘அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மேம்பாட்டுக்காக எண்ம தொழில்நுட்பம் பயன்பட வேண்டும் என்பது இந்தியாவின் கொள்கை.

தகவல் மற்றும் தொலைத்தொடா்பு தொழில்நுட்பத்தை பயங்கரவாதிகள், குற்றவாளிகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க மேற்கொள்ளும் சா்வதேச முயற்சிகளில் இந்தியா தனது ஒத்துழைப்பை தொடா்ந்து அளிக்கும்.

தகவல் பாதுகாப்பை உறுதிசெய்ய சா்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம். இதற்கு அரசுகள், தனியாா் துறை, கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பக் குழுக்கள், மக்கள் சமூகம் ஆகியவை ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

பயிற்சி, கல்வி, விழிப்புணா்வு, வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துதல் என நாடுகளுக்கு இடையே திறன்களைக் கட்டமைத்தல், உள்நாடு மற்றும் சா்வதேச அளவிலான வழிமுறையை உருவாக்குதல் ஆகியவை இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றாா் அஜீத் தோவல்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com