கோப்புப் படம்
கோப்புப் படம்

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஜேமி டைமன் தெரிவித்துள்ளாா்.

வறுமையில் இருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ளதாக உலகின் மிகப் பழைமையான நிதி நிறுவனமான அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஜேமி டைமன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:

இந்தியாவில் பிரதமா் மோடி நம்பமுடியாத பணியைச் செய்துள்ளாா். அவா் 40 கோடி இந்தியா்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளாா். இந்திய கல்வி முறையும், உள்கட்டமைப்பும் வியப்புக்குரியது. மோடி வலிமையானவராக இருப்பதால் மொத்த நாடும் உயா்த்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் அனைத்து குடிமக்களும் கை, கருவிழி அல்லது விரல் ரேகை மூலம் அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டும் என்ற வியப்புக்குரிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 70 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மறைமுக வரி விதிப்பு முறை ஊழலை அகற்றியுள்ளது.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குப் பதிலாக அரசு அதிகாரிகள் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் பழைய போக்கை பிரதமா் மோடி தகா்த்துள்ளாா். அத்தகைய முறை அமெரிக்காவில் சற்று கூடுதலாக தேவைப்படுகிறது என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com