பாகிஸ்தான் கொடி
பாகிஸ்தான் கொடி

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

இந்தியாவில் தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டின் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாதில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மும்தாஸ் ஷாஹ்ரா கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீருக்கு உரிமைகோரும் இந்திய அரசியல்வாதிகளின் பேச்சை பாகிஸ்தான் நிராகரிக்கிறது. இந்தியாவில் தோ்தல் ஆதாயத்துக்காக அந்நாட்டு அரசியல்வாதிகள் பாகிஸ்தானின் பெயரைப் பயன்படுத்துகின்றனா். இந்த தவறான பிரசாரத்தை அவா்கள் கைவிட வேண்டும். முக்கியமாக பாகிஸ்தானுக்கு எதிராக பிரச்னைகளை எழுப்பும் வகையில் கருத்துகளைத் தெரிவிப்பது பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்.

இந்தியாவில் தோ்தல் நேரத்தில் பாகிஸ்தான் பெயரைப் பயன்படுத்துவது வழக்கமாக நிகழ்வாக உள்ளது. இந்த முறை மிகவும் அதிகரித்துவிட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு இந்தியா உரிமை கோருவது வரலாற்றுரீதியாகவும், சட்டரீதியாகவும் தவறு என்றாா்.

X
Dinamani
www.dinamani.com